தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறப்பது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று என்று விலகுகிறதோ அன்று கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கும், தேர்வுகளை நடத்துவதற்கும் தயாராக இருக்கின்றோம்.
கரோனா விலகும் வரை கல்லூரிகள் திறப்பு இல்லை - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் - கல்லூரிகள்
சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று என்று விலகுகிறதோ அன்று கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கும், தேர்வுகளை நடத்துவதற்கும் தயாராக இருப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
anbalagan
அதேபோல், பொறியியல் கலந்தாய்விற்காக இணையத்தில் பதிவு செய்வதற்கும் அனைத்தும் தயாராக இருக்கிறது. கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, முழுமையாக சுத்தம் செய்த பின், மாணவர்களுக்கு எந்தவித அச்சமும் இல்லை என கருதுகின்ற பட்சத்தில் கல்லூரிகள் திறக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வெளிநாடுகளில் சிக்கியுள்ள மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை - ஜெயக்குமார் அறிக்கை