சென்னை:தலைமைச் செயலகத்தில் இன்று அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டு செமஸ்டர், தொழில் பயிற்சி வழங்கும் வீதத்தில் MANDO ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் உயர் கல்வித்துறையுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, வேலூரில் உள்ள தந்தை பெரியார் பாலிடெக்னிக் ஆகிய இரண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் sandwich course மூலம் மூன்றரை ஆண்டுகள், மாணவர்கள் கல்வி கற்பார்கள். மொத்தம் ஏழு செமஸ்டர் உள்ள நிலையில் நான்காவது செமஸ்டர் மற்றும் ஏழாவது செமஸ்டர் முழுக்க முழுக்க தொழில் பயிற்சி வழங்கும் வீதத்தில் MANDO ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. நான் முதல்வர் திட்டத்தின் கீழ் ஒரு அங்கமாக இது செயல்படுகிறது.
இதன்மூலம் இந்த பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள் நான்காவது மற்றும் ஏழாவது செமஸ்டர் MANDO ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பயிற்சி பெறுவார்கள் என தெரிவித்தார். அப்போது மாணவர்கள் தங்கி பயலும் செலவை இந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.