சென்னை: தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலிப்பதாகக் கூறி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பாலமுருகன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில கல்லூரிகளில் 7 லட்சத்து 50 ஆயிரம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.