தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் வழக்கு.

அதிமுக அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பன்னீர்செல்வம் ஆதரவாளர் தாக்கல் செய்துள்ள மனு மீது தமிழ்க அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்க சென்னனை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 13, 2022, 1:23 PM IST

சென்னை:முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஜே சி டி பிராபகர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நாளன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பன்னீர்செல்வம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயற்சித்தார். அப்போது, அடியாட்களுடன் அலுவலகம் முன் கூடிய எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களான தி நகர் சத்யா, விருகை ரவி மற்றும் ஆதி ராஜாராம் ஆகியோர் உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர்.

மேலும், கத்தி, பாட்டில்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தங்களை தாக்கவும் செய்தனர். இது தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்துக்குள் உள்ள முக்கிய ஆவணங்களை பாதுகாக்கவே, அவற்றை பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடுத்து வந்து அவரது வாகனத்தில் வைத்தனர். நடந்த உண்மை இவ்வாறு இருக்க, தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக அளித்த புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னனை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், உள்துறை செயலாளர், டிஜிபி , ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் சென்னை சிபிசிஐடி ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை (செப்.19) ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:இரண்டாவது நாளாக அரைக்கம்பத்தில் பறந்த தேசிய கொடி ...

ABOUT THE AUTHOR

...view details