சென்னை: அதிமுகவின் பொதுக்குழு இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்தநிலையில் கோயம்பேட்டில் இருந்து வானகரத்திற்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் - AIADMK general Counseling Meeting
பொதுக்குழு கூட்டத்திற்கு அதிமுகவினர் அதிக அளவில் வருவதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்
அதிமுகவினர் வழிநெடுகிலும் பதாகைகள் வைத்துள்ளனர். பொதுக் குழுவிற்கு வரக்கூடிய தலைவர்களுக்கு ஆரத்தி எடுத்து வருகின்றனர். மேலும் மலர்தூவியும், ஆடியும் தலைவர்களை வரவேற்று வருகின்றனர். இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நிரம்பி வழிந்த அதிமுகவினர் கூட்டம்
இதையும் படிங்க: ADMK GENERAL COUNCIL MEETING: அதிமுக பொதுக்குழுக்கு புறப்பட்டார் ஓபிஎஸ்.. வழிநெடுகிலும் மலர்தூவி வரவேற்பு