தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அல்கொய்தா தலைவர் கொலை எதிரொலி - சென்னை அமெரிக்க தூதரகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு - Al Qaeda leader Ayman al Zawahiri

அல்கொய்தா இயக்க தலைவர் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில். சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Etv Bharatஅல்கொய்தா தலைவர் கொலை எதிரொலி - அமெரிக்க தூதரகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு
Etv Bharatஅல்கொய்தா தலைவர் கொலை எதிரொலி - அமெரிக்க தூதரகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

By

Published : Aug 3, 2022, 1:06 PM IST

சென்னை:ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இருந்த அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தற்போது தாலிபான் இஸ்லாமிய இயக்கம் ஆப்கானிஸ்தான் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய அமெரிக்கா படைகள் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 1)காபுலில் திடீர் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டார். இந்நிலையில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்பாக 2 வஜ்ரா வாகனங்களை முன்னிறுத்தி 40-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார் கண்காணிப்பு பணிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சிறப்பு காவல்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு மேலும் சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:அல் கொய்தா தலைவர் ஜவாஹிரி கொல்லப்பட்டார் - அமெரிக்க அதிபர் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details