தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: மேற்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - CHENNAI METEOROLOGICAL CENTER

வட தமிழ்நாட்டையொட்டி ஆந்திரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்குப் பருவ காற்று ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

By

Published : Aug 29, 2021, 2:37 PM IST

சென்னை: இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று (ஆக.29) நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழை பெய்யக்கூடும்.

தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 30: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 31: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 1: வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

செப்டம்பர் 2: வட கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை வானிலை: சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்சமாக வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்)

சத்தியபாமா பல்கலை (செங்கல்பட்டு), அவலாஞ்சி (நீலகிரி) தலா 9, சின்னக்கல்லார் (கோவை) 8, நடுவட்டம் (நீலகிரி) 7, கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 6, சோழிங்கநல்லூர் (சென்னை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), தேவலா (நீலகிரி), வால்பாறை (கோவை) தலா 5, சோழவரம் (திருவள்ளூர்), பொண்ணை அணை (வேலூர்) தலா 4, சென்னை விமான நிலையம், சென்னை நுங்கம்பாக்கம், பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), வானமாதேவி (கடலூர்) தலா 3, பெரியார் (தேனி), ஆயிக்குடி (தென்காசி), செஞ்சி (விழுப்புரம்) தலா 2, பாபநாசம் (திருநெல்வேலி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), ஏற்காடு (சேலம்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்ககடல் பகுதிகள்

இன்று:மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்

இன்றும், நாளையும்: கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இன்றும், நாளையும்: தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: வார விடுமுறை - கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ABOUT THE AUTHOR

...view details