தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! - Chennai Meteorological Department Announced

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு  14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Meteorological Department Announced

By

Published : Oct 8, 2019, 10:22 PM IST

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகத் தமிழ்நாட்டில், மதுரை, திண்டுக்கல், தேனி,கோவை, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நீலகிரி, வேலூர், திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட பதினான்கு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகக் கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல்லில் 10 செ.மீ மழையும், கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் 8 செ.மீ மழையும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி, தேனி மாவட்டம் பெரியகுளம், நீலகிரி மாவட்டம் நடுவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் 5 செ.மீ மழை பெய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும்; நகரின் அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி பாரன்ஹீட்டும், குறைந்தபட்சமாக 80.6 டிகிரி பாரன்ஹீட்டும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குமரியில் திடீரென கொட்டித்தீர்த்த மழை!

ABOUT THE AUTHOR

...view details