தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புதுச்சேரியில் கனமழை; வாகன ஓட்டிகள் சிரமம்! - புதுச்சேரி அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் இருசக்கர வாகனஓட்டிகள் சிரமமடைந்தனர்.

புதுச்சேரியில் கனமழை பெய்தது தொடர்பான காணொலி
புதுச்சேரியில் கனமழை பெய்தது தொடர்பான காணொலி

By

Published : Oct 10, 2021, 10:07 PM IST

புதுச்சேரி: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்டப் பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று (அக்.10) மாலை புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

புதுச்சேரியில் கனமழை பெய்தது தொடர்பான காணொலி

இதனையடுத்து குடியிருப்பு பகுதிகளான வெங்கட்டா நகர் , ரெயின்போ நகர் உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மாவட்ட நிர்வாகம் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையும் படிங்க:ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details