தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த நான்கு நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

heavy rains
heavy rains

By

Published : Aug 21, 2021, 1:16 PM IST

சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழை பெய்துவருகிறது. தமிழ்நாட்டில் இன்று காலை முதலே சென்னை, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது.

புதுச்சேரியில் முத்தியால்பேட்டை, ராஜ்பவன், நெல்லித்தோப்பு, உப்பளம் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், அம்பத்தூர், தேனாம்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் முக்கியச் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னை, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த நான்கு நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அடுத்த நான்கு நாள்கள்

அதன்படி, "நாளை (ஆகஸ்ட் 22) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (ஆகஸ்ட் 23) திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 24, 25ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழ்நாட்டின் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

ABOUT THE AUTHOR

...view details