சென்னை:சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் பெரு மழை தொடரும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெரு மழை எச்சரிக்கை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி மக்களே கவனம்! - தமிழக வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் வெகுவான இடங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுவருகிறது. இச்சூழலில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் பெரு மழை தொடரும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
heavy rainfall warning by tn sdma
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு, சேலம் மாவட்டத்தில் அடுத்த 6 மணி நேரத்துக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை தொடர் வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.