தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மிக மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்துவரும் சூழலில் மிக மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பூவரசன் கூறியுள்ளார்.

மழை எச்சரிக்கை

By

Published : Aug 8, 2019, 4:59 PM IST

Updated : Aug 8, 2019, 7:09 PM IST

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தென் மேற்கு பருவக்காற்று தொடர்ந்து வலுவாக உள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு உள்,தென் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மிக கன மழை முதல் மிக மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 82 செ.மீ மழையும், மேல்பவானியில் 30 செ.மீ, கூடலூர் 24 செ.மீ, சின்னக்கல்லார் 23 செ.மீ, தேவாலா 21 செ.மீ, கோவை மாவட்டம் வால்பாறையில் 20 செ.மீ, நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 17 செ.மீ, கன்னியாகுமரி மாவட்டம் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் மிக கன மழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

மேலும், மத்திய மேற்கு, தென் மேற்கு வங்கக்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி.மீவரை வீசுவதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்றார்.

Last Updated : Aug 8, 2019, 7:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details