தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 22 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

heavy-rain-warning
heavy-rain-warning

By

Published : Oct 20, 2021, 3:23 PM IST

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், திருச்சி ஆகிய 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள்(அக்.22) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். அதேபோல, தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வடகிழக்கு பருவமழை

அக்.23, 24ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய கூடும்.

மேலும் வங்கக் கடல், தென்னிந்திய கடல் பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில், அக்டோபர் 26ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவக்காற்று வீச வாய்ப்புள்ளது. அதனடிப்படையில், தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details