தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு... - Heavy rains

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 6, 2022, 11:28 AM IST

சென்னை:தமிழ்நாடு மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இன்று(அக்.06) முதல் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் இன்று(அக்.06) கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த நான்கு நாட்களுக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை நீட்டிக்கும் எனவும், காற்று 44-55 முதல் 65 kmph வீசக்கூடும் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

காலை முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் குளிர்ச்சியான தட்ப வெப்பம் நிலவுகிறது.

இதையும் படிங்க: கடலில் கரைக்கப்பட்ட நவதுர்க்கை சிலை...

ABOUT THE AUTHOR

...view details