தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை

By

Published : Oct 16, 2021, 2:07 PM IST

சென்னை: இன்று (அக். 16) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், திருச்சிராப்பள்ளி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 17: கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 18: வடக்கு உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 19:தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 20:தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையின் வானிலை நிலவரம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு

தருமபுரி 7 செ.மீ.,

பொண்ணை அணைக்கட்டு (வேலூர்), நாகர்கோவில் (கன்னியாகுமரி), கன்னியாகுமரி, ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), சோழவரம் (திருவள்ளூர்) தலா 6 செ.மீ.,

ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), கொட்டாரம் (கன்னியாகுமரி) தலா 5 செ.மீ.,

மைலாடி (கன்னியாகுமரி), திண்டிவனம் (விழுப்புரம்) தலா 4 செ.மீ.,

ஏற்காடு (சேலம்), தக்கலை (கன்னியாகுமரி), திருத்தணி (திருவள்ளூர்), அரூர் (தருமபுரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 3 செ.மீ.,

பூதப்பாண்டி (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), ராதாபுரம் (திருநெல்வேலி), திண்டுக்கல் தலா 2 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மத்திய மேற்கு, அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

தென் கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய கேரளா - லடச்சத்தீவு கடலோரப் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று தென் கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய கேரள கடலோரப் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

வங்கக்கடல் பகுதிகள்

அக்டோபர் 16, 17: குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அக்டோபர் 16: வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்

அக்டோபர் 16,17: தென் கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோரப் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க:அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு - சசிகலா!

ABOUT THE AUTHOR

...view details