தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

TN WEATHER: நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 5) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

HEAVY RAIN ALERT FOR 5 DISTRICT IN TAMILNADU, CHENNAI REGIONAL METEOROLOGICAL CENTRE, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, சென்னை வானிலை ஆய்வு மையம்
4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

By

Published : Dec 5, 2021, 12:45 PM IST

சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 5) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென் தமிழ்நாடு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் (திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளைய நிலவரம்

தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் (திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி) ஒரு சில இடங்களில் நாளை (டிசம்பர் 6) இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 7: தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

டிசம்பர் 8: கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 9: கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த ஆறு மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரிசா கடற்கரையோரம் நிலைகொள்ளும்.

இதன் காரணமாக இன்று வட மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள், ஒரிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: நாகாலாந்தில் கலவரம்: பாதுகாப்பு படையினர் தாக்குதலில் 12 பலி

ABOUT THE AUTHOR

...view details