சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வரும் மூன்று நாள்களுக்கு மழை தீவிரமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரண்டு நாள்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியான ஆலந்தூர், பழவந்தாங்கல், விமானநிலையம், பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சேலையூர், குரோம்பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு தொடங்கி தற்போது வரை பரவலாக மழை பெய்து வருகிறது.
மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இதனால் சென்னைப் புறநகர் பகுதியில் உள்ள சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும், மற்றும் வீடுகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
தண்ணீரில் மிதக்கும் தாம்பரம் இதன் விளைவாக தாம்பரத்தை அடுத்த இரும்புளியூர், அருள் நகர், ரோஜாத் தோட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளிலும், வீடுகளிலும் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்இத்தகவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைத்து அவர்களுக்கு உணவு அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:School,College Leave : கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை