மயிலாப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ எம்பிபிஎஸ் மருத்துவப்படிப்பு கலந்தாய்வில் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கல்லூரிகள் வாயிலாக மீண்டும் கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! - சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை! - கலந்தாய்வு முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
சென்னை: மருத்துவக் கலந்தாய்வில் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
secretary
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஐஐடியில் மாணவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஐஐடி வளாகத்தில் நோய்த்தொற்று தொடர்ந்து பரவாமல் தடுத்திட ஐஐடி இயக்குநருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன “ என்றார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக் கழகத்தில் 700 மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை?