தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 22, 2020, 2:36 PM IST

ETV Bharat / city

சென்னை விமான நிலையத்திற்கு வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்!

சென்னை: லண்டனிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வருபவர்களுக்கு கட்டாயம் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைபடுத்தலுக்கு அனுப்படுவார்கள் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

health Secretary inspects chennai airport
health Secretary inspects chennai airport

லண்டனில் கரோனா தொற்று அதிக வீரியத்துடன் பரவல் அதிகமாகி வருகிறது. இதனால் 22 ஆம் தேதியில் இருந்து வருகிற 31 ஆம் தேதி வரை லண்டனுக்கு விமான போக்குவரத்துக்கு தடை விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டது.

சுகாதாரச் செயலாளர் ஆய்வு

இதையடுத்து, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். தற்போது வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் கரோனா சோதனை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லலாம். ஆனால் லண்டனிலிருந்து வருபவர்களுக்கு கரோனா சோதனை செய்து தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்க அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

லண்டனிலிருந்து வந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை

லண்டனிலிருந்து டெல்லி வழியாகச் சென்னை பன்னாட்டு முனையத்திற்கு வந்த 3 பெண்கள் உள்பட 8 பேரும், உள்நாட்டு முனையத்திற்கு வந்த 2 குழந்தைகள், பெண் உள்பட 7 பேரும் விமான நிலையத்தில் தனியாக தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் 15 பேரும் கரோனா சோதனை செய்தபின் தனிமைப்படுத்தலுக்காக தனியார் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "கரோனாவில் இன்னொரு வகையான வைரஸ் லைன் ஏஜ் பி117 என்ற அதிகவீரியத்துடன் லண்டனில் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 22 ஆம் தேதி நள்ளிரவில் இருந்து 31 ஆம் தேதி வரை லண்டனிற்கு விமான போக்குவரத்தை மத்திய அரசு தடை செய்துள்ளது. தற்போது வரை சென்னை விமானநிலையம் வருபவர்கள் 76 மணி நேரத்திற்கு முன் கரோனா பரிசோதனை செய்துவிட்டு வருபவர்கள் வீட்டில் தனிமைப்படுத்த அனுப்பபடுகின்றனர்.

விமான நிலையத்தில் பரிசோதனை

தற்போது அந்த முறையை மாற்றி மீண்டும் விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. பொது சுகாதார துறை அலுவலர்கள், விமான நிலைய அலுவலர்கள், சென்னை மாநகராட்சி அலுவலர்கள் இணைந்து கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். லண்டனிலிருந்து நேரிடையாக விமானங்கள் இல்லை என்றாலும் லண்டனிலிருந்து வேறு நகரங்கள் முலமாக சென்னைக்கு வரக்கூடியவர்கள் குறித்து கண்காணித்து வருகிறோம்.

தனிமைப்படுத்தல்

டெல்லியிலிருந்து வந்தவர்களை கட்டண தனிமைப்படுத்தலுக்கும் இல்லை என்றால் இலவசமாக கல்லூரிக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள். 5 மணி நேரத்தில் கரோனா சோதனை முடிவை அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று இல்லை என்றால் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அனுப்பி வைக்கப்படுவார்கள்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

லண்டனிலிருந்து வந்தவர்கள் விவரங்கள்

தொற்று இருந்தால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபடுவார்கள். லண்டனிலிருந்து டெல்லி வழியாக வந்த விமானத்தில் கடந்த ஒரு வாரமாக லண்டன் பயணிகளுடன் அமர்ந்து வந்தவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தாலோ, அச்சம் ஏற்பட்டாலோ சோதனையை செய்து கொள்ள வேண்டும்.

மற்ற விமான நிலையங்களில் கண்காணிப்பு

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதால் யாரும் அச்சப்பட தேவையில்லை. சென்னை விமான நிலையத்திற்கு வரக்கூடிய விமானங்களை அலுவலர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருவார்கள். விமான நிலையத்தில் உள்ள விமான நிறுவனங்களுடன் லண்டன் பயணிகள் குறித்த விவரங்களை கேட்டுள்ளோம். சென்னை மட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களிலும் சுகாதாரத் துறை முலமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. லண்டனிலிருந்து பரிசோதனை செய்து வந்தாலும் விமான நிலையத்தில் மீண்டும் சோதனை செய்யப்படுகிறது” என்றார்.

இதையும் படிங்க:விழுப்புரத்தில் கரோனா தடுப்புப் பணி மேற்கொண்ட சுகாதாரத்துறைச் செயலாளர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details