தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அவதூறு பரப்பாதீர்' - வானதி சீனிவாசனுக்கு மா. சுப்பிரமணியன் பதிலடி

சென்னை: "வானதி சீனிவாசன் எவ்வளவு தடுப்பூசி வந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என சமூகவலைதளம் மூலம் கேட்டுள்ளார். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் அதிகமாக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது" என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

'அவதூறு பரப்பாதீர்' - வானதி சீனிவாசனுக்கு மா. சுப்பிரமணியன் பதிலடி
'அவதூறு பரப்பாதீர்' - வானதி சீனிவாசனுக்கு மா. சுப்பிரமணியன் ப'அவதூறு பரப்பாதீர்' - வானதி சீனிவாசனுக்கு மா. சுப்பிரமணியன் பதிலடிதிலடி

By

Published : May 22, 2021, 10:17 PM IST

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக தனியார் மண்டபங்கள், காலி இடங்களில் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை, போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் 70 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை தொடங்கப்பட்டது. இது 36ஆவது சித்த மருத்துவமனையாகும்.

மதுரவாயல் எம்எல்ஏ கணபதி தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "எல்லா மாவட்டங்களிலும் படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்பட்டு உள்ளது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதாரண படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையங்களும், 600க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் வசதி கொண்ட சிகிச்சை மையங்களும் தொடங்கப்பட்டுள்ளன.

சமூகவலைதள அவதூறுக்கு மா. சுப்பிரமணியன் பதில்:

கோவையில் தடுப்பூசி போடுவதில் பாரபட்சம் காட்டுவதாக சமூகவலைத்தளங்களில் திட்டமிட்டு அவதூறு செய்தி பரப்பபட்டு வருகிறது. மத்திய அரசு மூலம் இதுவரை 78 லட்சத்து 49ஆயிரம் தடுப்பூசி வந்துள்ளது. அதில் 71 லட்சத்து 52 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. சுமார் 2 லட்சம் தடுப்பூசிகள் தற்போது கையிருப்பில் உள்ளன. அவற்றில் 6 விழுக்காடு மட்டுமே விரயம் செய்யப்பட்டுள்ளது.

கோவையில் மட்டும் 5 லட்சத்து 4 ஆயிரத்து 370 ஊசிகள் போட்டுள்ளோம். சென்னைக்கு அடுத்த படியாக கோவையில் அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்திற்கு எவ்வளவு தடுப்பூசிகள் போடப்படுள்ளது என்பதை இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். வானதி சீனிவாசன் எவ்வளவு தடுப்பூசி வந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என சமூக வலைதளம் மூலம் கேட்டுள்ளார்.

அதற்குரிய பதிலாக கூட இதனை எடுத்து கொள்ளலாம். எந்த வயதினருக்கான தடுப்பூசியும் கோவைக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த அரசு வெளிப்படை தன்மையான அரசு, மக்களுடன் தொடர்ந்து இணைப்பில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்பட்டுவருகிறது. சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்புவர்களுக்கு இன்னொரு செய்தி, ஊரடங்கால் தடுப்பூசி போடும் பணி எந்த விதத்திலும் பாதிக்காது. அடுத்த அலைகள் வந்தாலும் அதனை தடுக்க 100 மருத்துவமனைகள் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details