சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவு பகுதியை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”காய்ச்சல் பரவுவது குறித்து எந்த அச்சமுமில்லை. நோயாளிகள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வந்தால் முழுமையான சிகிச்சை அளிக்க எளிதாக இருக்கும். முழுமையான படுக்கை வசதி இருக்கும் அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் செல்ல வேண்டும். மருத்துவமனை மாற்றி மாற்றி சிகிச்சை பெறாமல், ஒரே மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.