தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க நடவடிக்கை - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

மாணவர்களுக்கு குடற்புழுக்கள் நீக்கும் மாத்திரைகள் வழங்கும் நடவடிக்கையாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் 3 கோடி மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்

By

Published : Sep 13, 2021, 1:47 PM IST

சென்னை: குடற்புழுக்களை நீக்கும் நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 80 லட்சம் நபர்களுக்கு மாத்திரை வழங்க உள்ளதாகவும், அதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் 3 கோடி மாத்திரைகள் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு, குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டத்தை சென்னை மயிலாப்பூர் சாந்தோம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

குடற்புழு நீக்கும் மாத்திரை

அப்போது பேசிய அவர், “இந்த குடற்புழு நீக்க மாத்திரை மூன்று தவணைகளாக போட வேண்டிய சூழல் இருந்தது. அதன் பிறகு இந்தியாவில் முதன் முதலில் ஒரே தவணையாக குடற்புழு நீக்கும் அல்பெண்டசோல் மாத்திரை 2010ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் வழங்கப்பட்டது.

மேலும், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இந்த மாத்திரை 2 கோடியே 80 லட்சம் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அதற்காக மாவட்டங்களுக்கு ஏற்கனவே 3 கோடி மாத்திரைகள் அனுப்பப்பட்டு இருகின்றன” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘உயிர் கொல்லியாக மாறும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details