தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

7.5% ஒதுக்கீட்டால் 395 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்கும்!

சென்னை: 7.5% உள் ஒதுக்கீட்டின் மூலம் 395 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

vijayabaskar
vijayabaskar

By

Published : Nov 12, 2020, 2:08 PM IST

தலைமைச் செயலகத்தில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ இன்று புதிய அவசர ஊர்திகளை முதலமைச்சர் துவக்கி வைத்ததன் மூலம், 700ஆக இருந்த ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்துள்ளது. கரோனா காலத்தில் இது வரை 29,8532 நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு குணமடைந்துள்ளனர். ஓரிரு மாதங்களில் ஜீ.பி.எஸ்-கருவியுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

மருத்துவ கலந்தாய்வுக்கு இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதுவரை 34,427 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. 4,061 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. வரும் 16 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 17,18 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கரோனா காலம் என்பதால் உரிய விதிமுறைகளுடன் நாளொன்றுக்கு 500 மாணவர்கள் கலந்தாய்வு அனுமதிக்கப்படுவார்கள் .

மருத்துவப்படிப்பிற்கான சேர்க்கையின்போது விண்ணப்பங்களில் குளறுபடிகள் நடந்திடாத வண்ணம் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களையும் சரிபார்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7.5% உள் ஒதுக்கீட்டின் மூலம் 395 அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்-இல் 304 இடங்களும், பி.டி.எஸ்-இல் 91 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது “ என்றார்.

இதையும் படிங்க: அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை - வைரமுத்து கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details