தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கருத்தடை சிகிச்சை செய்ய ஆண்களும் முன்வரவேண்டும்' - அமைச்சர் விஜயபாஸ்கர் அழைப்பு - சட்டப்பேரவை

சென்னை: கருத்தடை சிகிச்சை செய்துகொள்ள ஆண்களும் முன்வரவேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

vijayabaskar
vijayabaskar

By

Published : Feb 19, 2020, 12:16 PM IST

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக உறுப்பினர் பரமசிவம், பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டி, அப்பிரச்னையைக் களைய, ஆண்கள் கருத்தடை சிகிச்சை செய்ய ஊக்குவிப்பதில் அரசிடம் ஏதேனும் திட்டமுள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், நாட்டின் பொருளாதாரத்திற்கு மக்கள்தொகை கட்டுப்பாடு முக்கியம் எனவும், கருத்தடை செய்ய தனியாக துறை அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு இரண்டு லட்சம் பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், ஆண்களுக்கும் கத்தியின்றி, ரத்தமின்றியும் எவ்வித தழும்புமின்றியும் இரண்டு மணி நேரத்தில் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு 80 பேருக்கும், 2019ஆம் ஆண்டு 800 பேருக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், விருப்பமுள்ள, தகுதியுள்ள ஆண்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய தயாராக உள்ளதாகவும், கருத்தடை சிகிச்சை செய்துகொள்ள ஆண்கள் முன் வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். அமைச்சரின் இந்தப் பதிலால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

இதையும் படிங்க: ’அமைச்சர் வேலுமணி மீதான புகாரில் முகாந்திரம் இல்லை’ - உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு

ABOUT THE AUTHOR

...view details