தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விதிகளைப் பின்பற்றாத பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவரின் நியமனம் ரத்து - அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் நியமனம் ரத்து

சென்னை: திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவராக, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HC Quash the appointment of ex minister Agri Krishnamoorthy as milk product Association
HC Quash the appointment of ex minister Agri Krishnamoorthy as milk product Association

By

Published : Nov 28, 2019, 4:20 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 522 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் தினமும் மூன்று லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட சங்கத் துணைப்பதிவாளர், அம்மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்திருப்பதாகக் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அறிவித்தார்.

திருவண்ணாமலையில் உள்ள இலத்தூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை அக்ரி கிருஷ்ணமூர்த்தி நடத்திவருவதாகவும் அதன் காரணமாக அவருக்கு இந்தப் பதவி வழங்கி இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தாமல் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை மாவட்டப் பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுத்தது கூட்டுறவு சங்க விதிகளுக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது. மேலும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தலைவராகத் தேர்ந்தெடுக்க தகுதியாக கூறுப்படும் இலத்தூர் பால் உற்பத்தியாளர் சங்கம் தற்போது வரை ஒரு லிட்டர் பாலை கூட ஆவின் நிறுவனத்திற்கு வழங்கவில்லை.

விதிகளின் படி 90 நாட்களில் 120 லிட்டர் பாலை கூட்டுறவுக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை அக்ரி கிருஷ்ணமூர்த்தி வைத்திருக்கும் சங்கம் நிறைவேற்றியிருப்பதற்கான ஆவணங்களும் இல்லை. எனவே அக்ரி கிருஷ்ணமூர்த்தியை திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுத்ததை ரத்து செய்யக்கோரி வனபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பச்சமுத்து என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், கூட்டுறவு விதிகளைப் பின்பற்றாமல் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைவராக பதவி நியமனம் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details