சென்னை: முதலமைச்சர் நிவாரண நிதிக்கு எவ்வளவு நிதி இதுவரை வந்துள்ளது என்பதை வெளிப்படையாக இணையதளத்தில் தெரிவிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் கற்பகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கரோனா நிதி குறித்து வெளிப்படையாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு! - Hc order on CM relief fund
13:09 July 16
கரோனா நிவாரண நிதி அளித்தவர்கள் விவரம்? எவ்வளவு இதுவரை பெறப்பட்டது? பயனாளிகள் யார்? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதில், முதலமைச்சர் பொது நிவாரண நிதி இணையதளத்தில், நிதி வழங்கியவர்கள் யார் யார்? பயனாளிகள் யார் யார்? என்பன உள்ளிட்ட எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை என புகார் தெரிவித்துள்ளார். வெளிப்படைத் தன்மையை பேணும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி இணையதளத்தில், பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்த விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எவ்வளவு நிதி பெறப்பட்டது என்பது குறித்து இணையதளத்தில் வெளியிடுவதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது என்று கேள்வியை எழுப்பியிருந்தது.
இவ்வேளையில் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கரோனா நிவாரண நிதி கொடுத்த நன்கொடையாளர்களின் பெயர்கள், பயனாளிகள் யார்? எப்படி நிதி நிர்வகிக்கப்படுகிறது? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அரசு இணையதளத்தில் எட்டு வாரத்தில் வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய, நிவாரண நிதியத்தை உருவாக்க மத்திய - மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.