கோவை மாவட்டம், சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் செவிலியராக பணியாற்றிய சீனிவாசன், வேலூர் கல்லாவி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். மூன்றரை வயது குழந்தை இருப்பதால் குடும்ப நலனைச் சுட்டிக்காட்டி, பணிமாற்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, நிர்வாக காரணங்களுக்காக சீனிவாசன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று, நிர்வாக காரணங்களுக்காக பணிமாற்றம் செய்யும் போது, நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.