தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

"ஒற்றைத்தலைமை வேண்டும்": ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம்! - edappadi pazhanisamy

ஒற்றைத்தலைமை வேண்டும் என அதிமுக அலுவலகம் முன்பு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

"ஒற்றை தலைமை வேண்டும்" ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம்
"ஒற்றை தலைமை வேண்டும்" ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம்

By

Published : Jun 14, 2022, 3:54 PM IST

Updated : Jun 14, 2022, 4:19 PM IST

சென்னை:அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. வழக்கமாக பிற அணிகளின் மாவட்டச்செயலாளர்கள், துணை நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்குமாறு பொதுக்குழுவுக்கு அழைப்பு அனுப்பப்படுவது வழக்கம். ஆனால், இந்த பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

இந்த பொதுக்குழு கூட்டம் நடத்துவது தொடர்பாக, நடந்த இன்றைய ஆலோசனைக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச்செயலாளர்கள் 150 பேர் பங்கேற்றனர்.

ஆலோசனைக்கூட்டத்தில் நடந்தது என்ன?பொதுக்குழு கூட்டத்தில் யார்-யாரை பேச அழைப்பது, என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த முறை கூடும் பொதுக்குழுவில் ஆட்சியை இழந்ததற்கான காரணம் குறித்து பலர் கண்டிப்பாகப் பேசுவார்கள். அது மட்டுமல்ல சசிகலா விவகாரம் குறித்தும் கருத்து மோதல்கள் ஏற்படக்கூடும். ஒற்றைத் தலைமை முழக்கத்தை யாராவது எழுப்பினால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட கழகச்செயலாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கி 'மினிட்' புத்தகத்தில் கையெழுத்து வாங்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. தற்போது அதிமுக-வில் வழிகாட்டுதல் குழு உள்ளது. இந்த குழுவுக்குப் பதிலாக உயர் மட்டக்குழு உருவாக்க படக்கூடும் எனத் தெரிகிறது.

சசிகலா ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்தில் நுழைவதைத்தடுக்க அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம்!

சலசலப்பு: இந்த நிலையில் கூட்டம் நடைபெற்ற தலைமை கழகத்திற்கு வெளியே அதிமுக அலுவலகம் முன்பு ஓ.பன்னீர் செல்வம் , எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிமுக-வில் ஒற்றை தலைமை கோரி தொண்டர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சிலர் ஓபிஸ் தான் அம்மா காட்டிய முதலமைச்சர்; அவர் தான் மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும், என கோஷமிட்டதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:நாங்கள் தான் எதிர்க்கட்சி: திரும்ப திரும்ப சொல்வதற்கு கூச்சமாக இருக்கிறது - அன்புமணியின் ஆதங்கம்...

Last Updated : Jun 14, 2022, 4:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details