சென்னை: கிண்டியில் 15 வயது சிறுமி, தனது தந்தைக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக செஸ் சைல்டு லயன் குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது தந்தை ஏழு வயதில் இருந்து பதினைந்து வயது வரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கடந்த 2019ஆம் ஆண்டு சிறுமி கர்ப்பமாகிய நிலையில், தகவலை தாயிடம் தெரிவித்தபோது, கருவை கலைத்த தாயார் சம்பவத்தை வெளியில் சொன்னால், கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சிறுமியின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.