"எம்.கே.-1 ஏவை இந்திய ராணுவத்திடம் ஒப்படைப்பது பிரதமரின் ஒரு பெரிய முடிவாகும். இந்திய அரசின் செயல்பாடுகள் அனைத்தும் தன்னிறைவு பெறும் வகையில் அமைந்துள்ளதாக டிஆர்டிஓ தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி பாராட்டியுள்ளார்.
உள்நாட்டில் தயாரான டாங்கியை, ராணுவத்திற்கு அர்ப்பணிக்கும் பிரதமர்! - தற்சார்பு இந்தியா
எம்.கே -1 ஏ போர் விமானத்தை இந்திய ராணுவத்திற்கு ஒப்படைக்கப் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவை டிஆர்டிஓ தலைவர் ஜி சதீஷ் ரெட்டி பாராட்டியதோடு, "நாட்டை முழுமையான தற்சார்பு பொருளாதாரத்திற்கு மாற்றுவதற்கான ஒரு படி இது" என்றும் கூறினார்.
Handing over MK 1A to Army
அர்ஜுன் மார்க் 1 ஏ 71 கூடுதல் அம்சங்களுடன் கூடிய அனைத்து அதிநவீன அம்சங்களுடன் கூடிய டாங்கி. ஐ.ஏ.எஃப் மற்றும் கடற்படைக்கான ஏர் டு ஏர் ஏவுகணை அஸ்ட்ரா, ஸ்மார்ட் ஏர்ஃபீல்ட் ஆயுதம், ஏடிஏஜிஎஸ் துப்பாக்கிகள் நடுத்தர சக்தி ரேடார் போன்றவை தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதாக பெருமிதம் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள அர்ஜுன் போர் டாங்கியை (எம்.கே -1 ஏ) இந்திய ராணுவத்திற்கு நாளை(பிப்.14) அர்ப்பணிக்கவுள்ளார்.