தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நாகூர் தர்கா நிர்வாகத்தை அறங்காவலர்களிடம் ஒப்படைக்க உத்தரவு - தற்காலிக குழு

நாகூர் தர்கா நிர்வாகத்தை, தற்காலிக குழுவிடமிருந்து அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க வக்பு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mhc
mhc

By

Published : Apr 15, 2022, 5:18 PM IST

சென்னை: நாகூர் தர்கா அறங்காவலர் உயிரிழந்ததை அடுத்து, அவரது உறவினர்கள் வாரிசு உரிமை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், வழக்கு முடியும் வரை நாகூர் தர்காவை நிர்வகிக்க இடைக்கால குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவில் உள்ள இடைக்கால நிர்வாகிகள் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இந்த முறைகேடு தொடர்பான வழக்கை, கடந்த 2017ஆம் ஆண்டு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தர்கா நிர்வாகத்தை கவனிக்க நான்கு மாத காலத்துக்கு என்ற அடிப்படையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி அக்பர் அடங்கிய தற்காலிக குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், தர்காவின் 465ஆவது உர்ஸ் விழாவில் பங்கேற்க முஹாலி முத்தவல்லி என்பவர், தர்கா நிர்வாகத்தை அறங்காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தர்காவின் தற்காலிக நிர்வாக குழு மேல் முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, நான்கு மாதங்களுக்கு என்று நியமிக்கப்பட்ட தற்காலிக நிர்வாக குழு, இன்னும் தொடர்வது ஏன். இந்த குழுவை கலைக்காது குறித்து விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (ஏப். 15) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தர்கா நிர்வாகத்தை தொடர விரும்பவில்லை என்றும், வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 1946ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தர்கா நிர்வாகத்தை அறங்காவலர்களிடம் வழங்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், தர்கா நிர்வாகத்தை அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க வக்பு வாரியத்துக்கு உத்தரவிட்டனர். அத்துடன் தற்காலிக நிர்வாக குழுவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அதை நீக்கிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு எடுக்கக் கூடாது; தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details