இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சவூதி அரேபியாவின் சுகாதார அமைச்சர் மற்றும் ஜித்தாவிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மின் அஞ்சலின்படி,
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சவூதி அரேபியாவின் சுகாதார அமைச்சர் மற்றும் ஜித்தாவிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மின் அஞ்சலின்படி,
"சவூதி அரேபியாவிற்கு வருகைதரும் புனிதப் பயணிகள் புறப்படுவதற்கு முன் இரண்டு டோஸ் தடுப்பூசி போடவேண்டும் என்று 'இந்திய ஹஜ் குழு' தெரிவித்துள்ளது. இந்தியப் பயணிகள் புனிதப் பயணம் மேற்கொள்ள நேரிட்டால், ஜுன் மாத மத்தியிலிருந்து புறப்பாடு விமானங்கள் இயங்கும்.
எனவே, பயணத்தில் இடையூறு ஏற்படாவண்ணம் இருக்க பயணிகள் முன்கூட்டியே தடுப்பூசி செலுத்திக்கொண்டு தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஹஜ்-2021 தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் சவூதி அரசிடமிருந்து இதுவரை பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஹஜ் 2021-இன் அனைத்து செயல்முறைகளும் சவூதி அலுவலர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டதாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.