தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அரசியல் சாணக்கியரை வரவேற்கிறேன்'- ஹெச். ராஜா - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று சென்னை வரவுள்ள நிலையில், அரசியல் சாணக்கியரை வரவேற்கிறேன் என பாஜக மூத்தத் தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

Raja
Raja

By

Published : Nov 21, 2020, 6:40 AM IST

பிரதமருக்கு அடுத்த முக்கிய பொறுப்பில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று சென்னை வருகிறார். அதையொட்டி, மூன்றாயிரம் காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

விமானம் மூலம் பிற்பகல் 1.40 மணியளவில் சென்னைக்கு வரும் அமித்ஷா, லீலா பேலஸில் தங்குகிறார். பின்னர், 4.25 மணியளவில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப்பணி உள்பட பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கிறார்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “உள்துறை அமைச்சரும் அரசியல் சாணக்கியராக அறியப்படுகின்ற வெற்றி நாயகனை வருக வருக என வரவேற்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details