சிவசேனா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர், "உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கின்றோம்.
28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையை நாங்கள்தான் செய்தோம் என கூறும் சீமானால் எழுவர் விடுதலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் தமிழர்களை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளார். உடனடியாக சீமானை கைது செய்து விசாரணை நடத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.