திரௌபதி திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தின் சிறப்புக் காட்சியை பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பலர் நுங்கம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் இன்று பார்த்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, ”திரௌபதி படம், பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படம். நாடகக் காதலால் பெண்கள் ஏமாற்றப்படும் சூழ்நிலையில், சமூகத்தை சீர்படுத்தும் படமாக இதைப் பார்க்கிறேன். இதை அனைத்து சமுதாய மக்களும் நிச்சயம் பார்க்கவேண்டும். ஒவ்வொரு பெண்ணும் திரெளபதியாக வாழ வேண்டும்“ என்றார்.
’ஒவ்வொரு பெண்ணும் திரெளபதியாக வாழ வேண்டும்' - ஹெச்.ராஜா குறிப்பிட்ட நபர் மீது இப்படத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஹெச்.ராஜா, யார் பெயரையும், எந்த சமுதாயத்தையும் இந்தப் படத்தில் காட்டவில்லை என்றார். கவிஞர் தாமரையிடம் போய் கேட்டால் தெரியும், யாரெல்லாம் அப்போது வந்து பஞ்சாயத்து செய்தார்கள் என்று தெரிவித்த அவர், குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும், அதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.
தொடர்ந்து, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பேசுகையில், ”திரௌபதி படம் சாதி படம் எனும் தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர். ஆனால் இது உண்மையான காதல் பற்றிப் பேசும் படம். குறிப்பாக இந்தப் படத்தில் இந்துத் திருமணச் சட்டம் பற்றி பேசியுள்ளனர். தமிழ்நாடு அரசு இப்படத்திற்கு வரிச் சலுகை வழங்கி உதவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாற்று சாதி காதலை எதிர்க்கும் மனநோயளிகளை தோலுரிக்கிறது 'கன்னிமாடம்' - திருமாவளவன்