சென்னை:இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கடந்த மே 8ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் ஆடிட்டரும், ரிசர்வ் வங்கியின் இயக்குநரும், துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பொதுத்துறை வங்கிகளை கேவலப்படுத்தும் வகையில் பேசியும், அதன் அலுவலர்களை ’’கழிசடைகள்’’ என்று ஆதிக்க உணர்வுடன் இகழ்ந்தும் பேசியுள்ளார்.
ஒன்றிய நிதியமைச்சர் முன்பு குருமூர்த்தி இவ்வாறு பேசியது பொதுத்துறை வங்கி அலுவலர்கள், ஊழியர்கள் இடையே மிகப் பெரிய மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நாட்டு மக்கள் பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பை நன்கு உணர்ந்தவர்கள். கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் வங்கி ஊழியர்கள் என நிதியமைச்சர் பெருமையாக அதே மேடையில் பேசியிருந்தார்.