தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நாட்டின் சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின் - குலாம் நபி ஆசாத் புகழாரம் - cm stalin

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியைப் போலவே அவரது மகன் ஸ்டாலின் இருப்பதாகவும், நாட்டின் சிறந்த முதலமைச்சராக அவர் திகழ்வதாகவும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

gulam nabi azad meet cm stalin, குலாம் நபி ஆசாத், முதலமைச்சர் மு க ஸ்டாலின், தமிழ்நாடு அரசு செய்திகள், cm mk stalin
gulam nabi azad meet cm stalin

By

Published : Oct 3, 2021, 2:11 PM IST

சென்னை: ஒன்றிய முன்னாள்அமைச்சரான குலாம் நபி ஆசாத் இன்று சென்னை வந்தார். அவர் மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.

அப்போது ஸ்டாலினின் மனைவி துர்கா, மக்களவை உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஸ்டாலின் - குலாம் நபி ஆசாத் சந்திப்பு

இந்தச் சந்திப்புக்குப் பின், ''நாட்டின் சிறந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அவரது செயல்பாடுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றன. நாளொன்றுக்கு ஸ்டாலின் 18 முதல் 19 மணி நேரம் உழைக்கிறார். தந்தை கருணாநிதி போலவே மகனும் இருக்கிறார்'' என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மோடியைப் புகழ்ந்த குலாம் நபி ஆசாத்தின் உருவபொம்மையை எரித்த காங். கட்சியினர்!

ABOUT THE AUTHOR

...view details