சென்னை:மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில், 'தமிழ்நாட்டின் ஜவுளித்தொழில் நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான விழுக்காடு பங்களிப்பை அளித்து, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணியைத் தவிர, கணிசமான வருவாயைப் பெற உதவுகிறது.
தொழில் துறை வளர்ச்சியிலும், நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பிலும் இது முன்னோடியாக உள்ளது. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றுநோய் மற்றும் பருத்தி நூல் விலையில் ஏற்பட்டுள்ள பெரும் உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இத்தொழில் கஷ்டங்களையும் சவால்களையும் எதிர்கொள்கிறது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் கடைசிக் கூட்டத்தில் ஜிஎஸ்டி ஐந்து விழுக்காட்டிலிருந்து பன்னிரெண்டு விழுக்காடாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.