துணை ஆட்சியர் பதவியில் காலியாக உள்ள 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் பதவியில் காலியாகவுள்ள 26 இடங்கள், வணிகவரித்துறை உதவி ஆணையர் பதவியில் காலியாகவுள்ள 25 இடங்கள், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் பணியில் காலியாகவுள்ள 13 இடங்கள், ஊரக வளர்ச்சித்துறையில் உதவி இயக்குநர் பணியில் 7 இடங்கள், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் பணியில் காலியாகவுள்ள 3 இடங்கள் என மொத்தமாக 92 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்ட குரூப் 1 முதல்நிலைத்தேர்வானது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு தள்ளிவைப்பு - TNPSC அறிவிப்பு - TNPSC அறிவிப்பு
அக்டோபர் 30-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத்தேர்வு, நவம்பருக்கு 19ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Etv Bharat
இத்தேர்வுக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தற்போது நிர்வாக காரணங்களுக்காக அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற இருந்த இத்தேர்வுகள் நவம்பர் மாதம் 19ஆம் தேதியில் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) அறிவித்துள்ளது.
Last Updated : Sep 9, 2022, 7:20 PM IST