தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நிலத்தடி நீர் எடுக்க உரிமம் - அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு

சென்னை: நிலத்தடி நீரை எடுக்க உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள குடிநீர் ஆலைகளின் விண்ணப்பங்களை இரண்டு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt

By

Published : Mar 13, 2020, 12:50 PM IST

சட்ட விரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் குடிநீர் ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உரிமம் இல்லாமல் நிலத்தடி நீர் எடுக்கும் குடிநீர் ஆலைகளை மூட உத்தரவிட்டது. பின், உரிமம் கோரி விண்ணப்பித்த குடிநீர் ஆலைகளிடம் வைப்புத்தொகையாக 50 ஆயிரம் ரூபாய் பெற்று விண்ணப்பங்களை பரிசீலிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நிலத்தடி நீர் எடுக்க உரிமம் கேட்டு 1,054 விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளதாகவும், அதில் 690 விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கத் தகுதி உடையது என்றும், நீதிமன்ற உத்தரவின்படி நிலத்தடி நீர் இருப்பு அளவை அறிந்து அதனடிப்படையில் உரிமம் வழங்குவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்க கேட்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 2024ஆம் ஆண்டு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு மழையை எதிர்பாராமல், தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இரண்டு வாரங்களில் உரிமம் கேட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், தவறினால் சம்பந்தப்பட்ட துறை ஊழியர் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டனர். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மக்களுக்கு குடிநீர் வினியோகத்தை அதிகரிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை மார்ச் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details