தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 27, 2021, 12:51 PM IST

ETV Bharat / city

மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கி தருவதாகக்கூறி பணமோசடி - சித்ராவின் கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: மருத்துவப் படிப்பிற்கு சீட் வாங்கித் தருவதாகக்கூறி பணமோசடி செய்த வழக்கில் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையுடன் சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சின்னத்திரை நடிகர் சித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமீன்
சின்னத்திரை நடிகர் சித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமீன்

சென்னை மேலக்கோட்டையூரைச் சேர்ந்த ஆஷா மனோகரன் என்பவர் காவல் துறையில் அளித்த புகாரில், 2011ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்திருந்த தனது மகள் மாளவிகா, அவரது தோழிகள் இருவர் என மூவருக்கும் எம்பிபிஎஸ் சீட் வாங்குவதற்காக தனது வீட்டின் அருகில் வசிக்கும் ரிட்டி சுந்தர் மூலம் ஹேம்நாத்தை அணுகிய நிலையில், ஒரு சீட்டுக்கு 35 லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் 1 கோடியே, 5 லட்ச ரூபாய் ஹேம்நாத்துக்கு கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

சொன்னபடி சீட் வாங்கித் தராததால் பணத்தை திருப்பி கேட்டபோது, ஹேம்நாத் 10 லட்ச ரூபாய் மட்டும் ரொக்கம் கொடுத்துவிட்டு வங்கிக்கணக்கில் பணமில்லாத காசோலைகளை கொடுத்து ஏமாற்றியதாகவும், தனது குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் காவல் துறையில் புகாரளித்த நிலையில், ரிட்டி சுந்தர், ஹேம்நாத் இருவருக்கும் எதிராக 2015ஆம் ஆண்டு ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்பு வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத்க்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட போதும், இந்த பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீன் கிடைக்காததால் ஹேம்நாத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

நிபந்தனையுடன் ஜாமீன்:

பணமோசடி வழக்கில் ஜாமீன் கோரி ஹேம்நாத் தாக்கல் செய்த மனு நேற்று (பிப்.26) நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், சிறையிலிருந்து வெளிவந்த மூன்று வாரத்திற்குள் 15 லட்ச ரூபாயை டெபாசிட் செய்யவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நடிகை சித்ரா தற்கொலை விவகாரம் - சக நடிகை சரண்யாவிடம் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details