சென்னை:கேசவ் தேசி ராஜு இதய கோளாறு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அவர் மருத்துவம் பலனின்றி நேற்று அதிகாலை மரணமடைந்தார்.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலிருந்து உடல் பெசன்ட்நகர் தகன மேடைக்கு இன்று காலை கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது உடல் தகனம்செய்யப்பட்டது.
முக்கியப் பொறுப்புகள்
66 வயதான கேசவ் தேசி ராஜு, சென்னையில் பிறந்து, தொடக்கக் கல்வியை டேராடூனிலும், உயர் கல்வியை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். இந்திய குடிமையியல் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற கேசவ், மத்திய சுகாதாரத் துறைச் செயலராகப் பதவி வகித்துள்ளார்.