சென்னை: தமிழ்நாட்டில் மே 1, அக்டோபர் 2, ஆகஸ்ட் 15, ஜனவரி 26 ஆகிய தேதிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். கடந்தாண்டு கரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவில்லை.
இந்த வருடமும் கரோனா பரவல் அதிகரிப்பாலும், மே 2ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளதாலும் அரசு ஊழியர்கள், ஊராட்சி மன்றச் செயலாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அது மட்டும் இல்லாமல், கரோனா பரவல் காரணமாக ஊரடங்கை அமல்படுத்த உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உள்ளது. இதனால் கிராம சபைக் கூட்டம் ரத்தாக வாய்ப்பு உள்ளதாக அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் கிராம சபைக் கூட்டம் சம்பிரதாயமாகவே நடத்தப்பட்டது. இந்த முறை அதுவும் நடைபெற வாய்ப்பு இல்லாததால் கிராம பஞ்சாயத்துகளில் பல வளர்ச்சித் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன.
இதையும் படிங்க: ஸ்டர்லைட் ஆலை திறப்பில் இரட்டை வேடம் போடுகிறதா அதிமுக?