சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறவிருந்த அனைத்து கிராம சபை கூட்டங்களும் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கிராம சபை கூட்டங்கள் ஒத்திவைப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
கிராமசபை கூட்டங்கள் ஆண்டுதோறும் ஜனவரி 26, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும். கரோனா பெருந்தொற்று காலம் என்பதால் நாளை (ஆகஸ்ட் 15) நடைபெறவிருந்த அனைத்து கிராமசபை கூட்டங்களும் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கிராமசபை கூட்டங்கள் ஆண்டுதோறும் ஜனவரி 26, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஆனால் தற்போது கரோனா பெருந்தொற்று காலம் என்பதால் நாளை நடைபெற இருக்கும் அனைத்து கிராமசபை கூட்டங்களும் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஊராட்சியின் செலவுகள், திட்ட பணிகள் போன்றவை குறித்த ஆலோசனைகள் நடத்தப்படும். வழக்கமாக குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதோடு அக்டோபர் 2-ஆம் தேதி கிராம சபை கூட்டமானது நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.