தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் கிராம சபை கூட்டம் ரத்து! - கரோனா மூன்றாவது அலை

கரோனா தொற்று காரணமாக ஜன.26 தேதி நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு அறிவிப்பு

By

Published : Jan 24, 2022, 7:25 PM IST

தமிழ்நாடு முழுவதும் வருகிற ஜன.26ஆம் தேதி குடியரசு தினம், மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம், ஆக.15ஆம் தேதி சுதந்திர தினம், அக்.2ஆம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாள்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்று.

ஆனால், தற்போது வேகமெடுக்கும் கரோனா மூன்றாவது அலையின் காரணமாக வருகின்ற ஜன.6ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கிராம மக்கள் ஒன்று கூடி தங்கள் கிராமத்திற்குத் தேவைகளை ஆராய்ந்து, அதற்கேற்ப கிராம சபைக் கூட்டத்தில் முடிவு செய்வர்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குடியரசு தின விழா பாதுகாப்புப் பணியில் 10,000 காவலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details