ஒரு ஆண்டிற்கு மேலான உழவரின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக, மூன்று வேளாண் சட்டங்களும் (Farm Laws) திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அறிவித்துள்ளார். மேலும், அவர் டெல்லி எல்லைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உழவர் போராட்டத்தைக் கைவிட்டு தங்களது வீடுகளுக்குத் திரும்புமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இது குறித்து, ராகுல், சிதம்பரம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் (CM MK Stalin) தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது பற்றி ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், "மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்போவதாக (Govt to Repeal Farm laws) பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.