தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு சிறப்பு வழக்கறிஞர் தம்பிதுரை திடீர் மரணம்! - Chief Justice Sanjeeb Banerjee

சென்னை: கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பெற்றுவந்த, அரசு சிறப்பு வழக்கறிஞர் தம்பிதுரை இன்று (மார்ச் 18) அதிகாலை திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தமிழ்நாடு அரசு சிறப்பு வழக்கறிஞர் தம்பிதுரை
தமிழ்நாடு அரசு சிறப்பு வழக்கறிஞர் தம்பிதுரை

By

Published : Mar 18, 2021, 10:05 PM IST

தமிழ்நாடு அரசின் சிறப்பு வழக்கறிஞராக இருந்துவந்த தம்பிதுரை, அதற்கு முன்னதாக அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும் இருந்த அனுபவம் உடையவர்.

அதிகாலை உயிரிழப்பு

மூச்சுத் திணறல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, சமீபத்தில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதற்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக இன்று (மார்ச் 18) அதிகாலை உயிரிழந்தார்.

அவரது திடீர் மரணத்தால் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், உயர் நீதிமன்ற வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதிகள் வேதனை

இன்று (மார்ச் 18) காலை அவரது மரணம் குறித்த தகவல், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில் தெரிவிக்கப்பட்டபோது, நீதிபதிகள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

அப்போது கொடுந்தொற்று நோயான கரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details