சென்னை:தமிழ்நாட்டில் புதிய வகை கரோனா தொற்று பரவி வருவதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டபேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர், 'உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று 10 % அதிகமாக பரவக் கூடியது. ஏற்கனவே குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
'எவ்வகை கரோனா வந்தாலும் எதிர்கொள்வோம்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை
தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று (ஏப்.12) கரோனா உருமாற்றம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் எந்தவகை கரோனா வந்தாலும் அதைத் தமிழ்நாடு அரசு எதிர்கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உருமாறிய கரோனா XE வைரஸ்:இது இன்னும் வருகிற ஜூன் மாதத்தில் தீவிரமடையும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்குள் 2 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடியுமா?' எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'ஓமைக்ரான் உருமாற்றம் 7 வகையாகப் பரவி வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற மே 7ஆம் தேதியன்று 25,000-க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று இருந்தது, ஆனால் அரசு மேற்கொண்ட அதிதீவிர நடவடிக்கையின் காரணமாகக் கடந்த ஒரு மாதமாக எந்த இறப்பும் பதிவாகாத நிலை ஏற்பட்டுள்ளது.
ரூ.360 கோடியில் படுக்கைகள்:குஜராத்திலும், மஹாராஷ்டிராவிலும் பரவி உள்ளதாகக் கூறியுள்ளனர். முதலமைச்சரின் அறிவுறுதலுக்கு ஏற்ப சர்வதேச விமான நிலையங்களில் பரிசோதனை செய்து வருகிறோம். அதன்படி, தொடர்ந்து ஏற்படும் உருமாற்றம் தொடர்பாகத் தகவல்களை அரசு தொடர்ந்து கவனித்து வருகிறது. நாளை மறுதினம் (ஏப்.14) ரூ.360 கோடியில் 2,096 அதி தீவிர நவீன படுக்கைகளை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.
அரசு எதிர்கொள்ளத் தயார்: இந்தியாவில் தடுப்பூசியை இயக்கமாக நடத்தியது தமிழ்நாடு அரசு. 27 வாரங்கள் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொற்றிலிருந்து முழுமையாக விடுபட நடவடிக்கை எடுக்கப்படும். நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் என்.கே. அரோரா, ஓமைக்ரான் உருமாற்றதால் பயப்படத் தேவை இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் எந்தவகை கரோனா வந்தாலும், அதைத் தமிழ்நாடு அரசு எதிர்கொள்ளும்' என்று பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: குஜராத்தில் முதியவருக்கு XE வைரஸ் உறுதி