தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இனிமேல் சில்லறை விற்பனை விலைக்கே டீசல் வாங்க தமிழ்நாடு அரசு முடிவு! - இனிமேல் சில்லறை விற்பனை விலைக்கே டீசல் வாங்க தமிழ்நாடு அரசு முடிவு

அண்மையில் எண்ணெய் நிறுவனங்கள் டீசலை ஒரு லிட்டருக்கு ரூ. 25 உயர்த்தியிருந்த நிலையில், சில்லறை விற்பனை விலையில் போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் வாங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்து இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

By

Published : Mar 21, 2022, 10:17 PM IST

சென்னை:மொத்தக் கொள்முதல் டீசலுக்கான விலையினை எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் ஒரு லிட்டருக்கு ரூ. 25 உயர்த்தியிருந்த நிலையில், விலை உயர்வினால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பாதிக்கப்படாமல் இருக்க, சில்லறை விற்பனை விலையில் போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் வழங்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும், சில்லறை விற்பனை விலையிலிருந்து லிட்டருக்கு 69 பைசா வரை குறைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கவும் எண்ணெய் நிறுவனங்கள் தயாராக இருப்பதாக போக்குவரத்துத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எண்ணெய் நிறுவனங்கள் முடிவு

தமிழ்நாட்டில் 8 போக்குவரத்துக் கழகத்தில் இருந்து 20,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதற்கு நாளொன்றுக்கு 16 லட்சம் லிட்டர் டீசல் வாங்கப்படுகிறது. அண்மையில் உயர்த்தப்பட்ட 'மொத்த கொள்முதல் டீசல்' விலையில், டீசல் வாங்கினால் நாள்தோறும் மூன்றரை கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவான நிலையில் தற்போது அது தவிர்க்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர், போக்குவரத்துத்துறைச் செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.927 கோடி நிதி பயன்படுத்தாமலேயே திருப்பி அனுப்பப்பட்டதாக RTIஇல் அதிர்ச்சித் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details