செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவர் நளினி, மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவர் தாஹிர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர் பாலமுருகன் உள்ளிட்ட 8 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் கேட்டு மருத்துவர்கள் மனு - Latest Chennai news
சென்னை: மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி அரசு மருத்துவர்கள் 8 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதில், தமிழ்நாட்டில், முதுநிலை அரசு மருத்துவர்களுக்கும், மத்திய அரசு பணியில் உள்ள இளநிலை மருத்துவர்களுக்கும் இடையே 40 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய வித்தியாசம் உள்ளதாகவும், அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மறு ஆய்வு செய்யும் வகையில் கடந்த 2009ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணை, அரசு மருத்துவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும், என கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.